'நான் என்ன சொல்ல முடியும்?': தேஜஸ்வி வீட்டில் நடக்கும் சோதனை குறித்து நிதீஷ் குமார்

நான் என்ன சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியருக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், இதே தான் 2017ஆம் ஆண்டிலும் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார், அரசு வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்றதாக பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கில், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் சிபிஐ நடத்தி வரும் சோதனை குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது பதிலளித்த நிதீஷ் குமார், கடந்த 2017ஆம் ஆண்டும் இதுதான் நடந்தது. அப்போதுதான் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் தனித்தனியாக பிரிந்தன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நாம் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறோம். மீண்டும் சோதனை நடைபெறுகிறது என்று நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக தேஜஸ்வி யாதவ்வை சிபிஐ அழைத்திருக்கும் நிலையில், தனது மனைவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்திருக்கிறார் தேஜஸ்வி யாதவ் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com