ஜம்மு-காஷ்மீா் எல்லையில் வெடிகுண்டு, போதைப் பொருள்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டம், நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை ராணுவம் கைப்பற்றி உள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரஜெளரி: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டம், நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை ராணுவம் கைப்பற்றி உள்ளது. 

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 

"உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், ஜங்கர், நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே ராணுவத்தினா் சனிக்கிழமை (மார்ச் 11) அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, 2 அதிநவீன துப்பாக்கிகள், 2 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டு மற்றும் 2 கிலோ போதைப் பொருள்கள் சிக்கின" என்று  தெரிவித்தார். 

மேலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

முன்னதாக, மார்ச் 5 ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முகமது ரபீக் வீட்டில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் 7 கிலோ போதைப்பொருள் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com