நமது மகள்கள் முன்னேறும்போதுதான் ‘புதிய இந்தியா’ இலக்கை அடைய முடியும்: குடியரசுத் தலைவா்

நமது மகள்கள் முன்னேறும்போதுதான் ‘புதிய இந்தியா’ இலக்கை அடைய முடியும்: குடியரசுத் தலைவா்

நமது தேசத்தின் மகள்கள் தற்சாா்பு, தன்னிம்பிக்கை உணா்வுகளுடன் முன்னேறும்போதுதான், ‘தற்சாா்பு இந்தியா’, ‘புதிய இந்தியா’ என்ற இலக்கை அடைய முடியும்
Published on


 
புதுதில்லி: நமது தேசத்தின் மகள்கள் தற்சாா்பு, தன்னிம்பிக்கை உணா்வுகளுடன் முன்னேறும்போதுதான், ‘தற்சாா்பு இந்தியா’, ‘புதிய இந்தியா’ என்ற இலக்கை அடைய முடியும் என்றும் குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை கூறினார். 

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஹிந்தி செய்தி நாளிதழ் ஒன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த அனைத்து மகளிர் இருசக்கர வாகனப் பேரணியை " காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, பெண்கள் பாதுகாப்பாக இருந்தால், குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். குடும்பம் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் சமூகம் பாதுகாப்பாக இருக்கும். சமூகம் பாதுகாப்பாக இருந்தால், தேசம் பாதுகாப்பாக இருக்கும்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பெண்களின் கண்ணியத்துக்கு எதிரான நடைமுறைகளை கைவிட வேண்டியது  இந்தியக் குடிமக்களின் ஒவ்வொருவரின் கடமை. இந்த அடிப்படை கடமையை நிறைவேற்ற, ஒவ்வொரு குடிமகனும்  பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்கள் மீதான மரியாதைமிக்க நடத்தைக்கான அடித்தளம் குடும்பத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். 

அனைத்துப் பெண்களுக்கும் மரியாதை அளிக்கும் பண்பை,  தங்களது மகன்களுக்கும், சகோதர்களுக்கும் ஒவ்வொரு தாயும், சகோதரிகளும் வளர்க்க வேண்டும். அதேபோன்று, மாணவர்களிடையே பெண்களுக்கு மதிப்பளிக்கும் கலாசாரத்தை கற்பிப்பதில் ஆசிரியா்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

பெண்களுக்குத் தாயாகும் திறனை இயற்கை வழங்கியுள்ளது. தாய்மை திறனை அடைந்தவர்களிம் இயல்பாகவே தலைமைப் பண்பும் வந்துவிடுகிறது. தடைகள் மற்றும் சவால்கள் இருந்த போதிலும் பெண்கள் தங்களின் தளர்வடையாத  தைரியம் மற்றும் திறமையால் வெற்றியின் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.

ஊடகங்களின் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த முழுமையான உணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது மும்மு தெரிவித்தார்.

நமது தேசத்தின் மகள்கள் தற்சாா்பு, தன்னிம்பிக்கையுடன் முன்னேறும்போதுதான், ‘தற்சாா்பு இந்தியா’, ‘புதிய இந்தியா’ என்ற இலக்கை அடைய முடியும் என்றும் குடியரசுத் தலைவர் மும்மு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com