அசாமில் 10-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானது: 22 பேர் கைது!

அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், திங்கள்கிழமை நடைபெறவிருந்த அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள், ஞாயிற்றுக்கிழமை இரவே கசிந்ததையடுத்து, அறிவியல் பாடத்திற்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அசாம் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்படக் குறைந்தது 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு தெரிவித்துள்ளார். 

மேலும், அறிவியல் பாடத்திற்கான மறுதேர்வு மார்ச் 30-ஆம் தேதி நடத்தப்படும் என்று அசாம் இடைநிலை வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com