பழைய கலால் கொள்கை 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: தில்லி அரசு 

பழைய கலால் கொள்கையை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பழைய கலால் கொள்கையை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் புதிய கலால் கொள்கையை விரைவில் தயாரிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தில்லி அரசு புதிய கலால் வரிக் கொள்கையை ரத்து செய்துவிட்டு பழைய கொள்கையை தற்போதைக்கு அமல்படுத்தியுள்ளது. புதிய கலால் கொள்கையை அதிகாரிகள் தயாரிக்காததால், பழைய கொள்கையே மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கையை (2021-22) உருவாக்கி அமல்படுத்தியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறையினா் கைது செய்தனா்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இதே விவகாரத்தில் சட்ட விரோதப் பண பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினரும் சிசோடியாவை கைது செய்தனா்.

தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் சிசோடியாவை மார்ச் 20 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com