கோப்புப் படம்
கோப்புப் படம்

அருணாசலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி

அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள மண்டலா அருகே இன்று காலை விபத்துக்குள்ளானதில் ராணுவத்தின் இரண்டு விமானிகள் பலியாகினர் என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


குவாஹாட்டி: அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள மண்டலா அருகே இன்று காலை ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த இரண்டு விமானிகள் பலியாகினர் என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது இணை விமானியான மேஜர் ஜெயந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் குவாஹாட்டியில் கூறியதாவது: 

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிசாமாரியில் இருந்து அருணாசலப் பிரதேசத்தின் தவாங் வரை ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது போது மோசமான வானிலையை எதிர்கொண்டது. அதன் காரணத்தினால் அந்த விமானம் மிசமாரிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

காலை 9.15 மணியளவில் ஹெலிகாப்டர் ஏர் டிராபிக் கன்ட்ரோல் உடனான தொடர்பை இழந்ததையடுத்து இந்திய ராணுவம் தேடுதலை உடனடியாகத் தொடங்கியது. விமானத்தின் உடைந்த பாகங்கள் மண்டலாவின் கிழக்கு கிராமமான பங்களாஜாப் அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக ராவத் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ராவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com