அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்சா: முகக்கவசம் அணிய எச்சரிக்கை! 

ஹிமாச்சலில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகரித்துவருவதன் காரணமாக முகக்கவசம் அணியுமாறு ஹமீர்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹிமாச்சலில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகரித்துவருவதன் காரணமாக முகக்கவசம் அணியவும், நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் ஹமீர்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி(சிஎம்ஓ)பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளார். 

மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் உரையாற்றிய தலைமை மருத்துவ அதிகாரி அக்னிஹோத்ரி கூறுகையில், 

நாட்டில் எச்3என்2 காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் காய்ச்சல் பாதிப்பால் வரும் மக்களுக்கு எந்தவிதமான காய்ச்சல் பரவுகின்றது என்பதைக் காணிக்குமாறு அறிவுறுத்தினார். 

பொதுவாக இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. அதன் அறிகுறிகள் பருவக்காய்ச்சல் வைரஸின் அறிகுறிகளைப் போன்றே இருக்கும். 

இது சுவாச பிரச்னைகள், காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு சிலருக்கு உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கும் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். 

கரோனா போன்று இன்ஃப்ளூயன்சா ஒரு தொற்று நோயாகும். பொதுமக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், ஒருவருக்கொருவர் போதுமான இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக்கவசங்களை பயன்படுத்தவும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை நாட்டில் 451 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பதிவாகியுள்ளன. இந்த காய்ச்சலுக்கு கர்நாடகம் மற்றும் ஹரியாணாவில் இருந்து தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com