கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
Published on

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தொண்டை புற்றுநோயால் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு வைரஸ் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த தகவலை அவரது மகன் சாண்டி உம்மன் தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது உடல்நிலைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

2019 முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்த உம்மன் சாண்டி ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொண்டை நோய்க்காக லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com