கேதார்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு மே 8 வரை நிறுத்தம்!

கேதார்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு மே 8 வரை நிறுத்தம்!

மோசமான வானிலை காரணமாக உத்தரகண்டின் கேதார்நாத் புனித பயணத்திற்கான முன்பதிவு மே 8-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. 
Published on

மோசமான வானிலை காரணமாக உத்தரகண்டின் கேதார்நாத் புனித பயணத்திற்கான முன்பதிவு மே 8-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. 

உத்தரகண்டின் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரை மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், கேதார்நாத்தில் அடுத்த 3 அல்லது 4 நாள்கள் மோசமான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சுற்றுலாத் துறையின் தகவலின்படி, 

மே 10ஆம் தேதி வரை யாத்திரைக்கு ஏற்கனவே 1.26 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கேதார்நாத்தில் தற்போது மோசமான வானிலை நிலவி வருவதால் முன்பதிவு செய்வது மே 8-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி வரை 1.23 லட்சம் பக்தர்கள் கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கேதார்நாத் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்புப் படையினர் உதவி செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com