எவரெஸ்ட் சிகரத்திலிருந்து வரும் பயங்கர சப்தத்தின் மர்மம் என்ன? 

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து மிக விசித்திரமான சப்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். இதன் மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்திலிருந்து வரும் பயங்கர சப்தத்தின் மர்மம் என்ன? 


சூரியன் மறைந்ததும், இமயமலையில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்துவிடும், பிறகு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து மிக விசித்திரமான சப்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். இதன் மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பனிப்பாறை நிபுணர் எவ்ஜெனி பொடோல்ஸ்கி தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், எவரெஸ்ட் சிகரத்திலிருந்து கேட்கும் அந்த விசித்திர சப்தத்தின் காரணத்தைக் கண்டறிந்துள்ளனர். அதாவது, இரவில் வெப்பநிலைக் குறையத் தொடங்கியதும், எவரெஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து அதிலிருந்து எழும் ஓசையே இவ்வாறு விசித்திரமாகக் கேட்பதை கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சுமார் ஒரு வாரத்துக்கும் மேல், இமயமலைப் பகுதியில் தங்கியிருந்து, அங்கு பனிப்பாறைகளில் நடக்கும் மாற்றங்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம், இந்த சப்தத்துக்கான காரணத்தைக் கண்டறிந்துள்ளனர்.

டாக்டர் பொடோல்ஸ்கி தலைமையிலான நிபுணர்கள் குழு, சுமார் மூன்று வாரத்துக்கும் மேல் நடுங்கும் குளிரில் பனிப்பாறைகளுக்கு இடையே இருந்து எவரெஸ்ட் சிகரத்திலிருந்து வரும் சப்தத்தின் காரணத்தைக் கண்டறிந்துள்ளனர். 

இந்த சப்தம் பயங்கரமாக இருக்கும் என்றும், அங்கு தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, சப்தத்தைக் கேட்டுக் கொண்டு உறங்குவது என்பது கடினமான இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பகலில் வெறும் டி-ஷர்ட் அணிந்துகொண்டு வேலை செய்வோம். ஆனால் இரவில் அங்கு -15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் அபாயம் இருந்தது.  இதனால், மிகப்பெரிய பனிப்பாறைகள் திடீரென வெடிப்பதும், விரிசல் விடுவதும் என இரவு முழுக்க பனிப்பாறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

பனிப்பாறைகளுக்குள், நுண்ணுணர்வு கருவிகளைப் பொருத்தியும், நில நடுக்கத்தை பதிவு செய்ய உதவும் கருவிகளைப் பயன்படுத்தியும் இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com