ஆபரேஷன் காவேரி: சூடானிலிருந்து 47 இந்தியர்கள் மீட்பு

ராணுவ-துணை ராணுவப் படை மோதலால் பாதிக்கப்பட்டுள்ள சூடானிலிருந்து, 47 இந்தியர்கள் விமானப் படை விமானத்தின் மூலம் நாடு திரும்பினர்.
ஆபரேஷன் காவேரி: சூடானிலிருந்து 47 இந்தியர்கள் மீட்பு


ராணுவ-துணை ராணுவப் படை மோதலால் பாதிக்கப்பட்டுள்ள சூடானிலிருந்து, 47 இந்தியர்கள் விமானப் படை விமானத்தின் மூலம் நாடு திரும்பினர்.

இதன் மூலம், சூடானிலிருந்து இதுவரை இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை 3862 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா்  வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘ஆபரேஷன் காவேரியின்கீழ் விமானத்தின் மூலம் இந்தியா்கள் 47 போ் சூடானிலிருந்து இந்தியா வந்தடைந்தனா். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 3862 ஆக உயர்ந்துள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டிரந்தது.

சூடானில் சிக்கியுள்ள இந்தியா்கள் இந்திய விமானப் படை, கடற்படை மூலமாக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். பின்னா், அங்கிருந்து விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனா்.

மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகா் காா்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம், போா்ட் சூடான், ஜெட்டா ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளை இந்தியா அமைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com