மல்லிகார்ஜுன கார்கேவை கொல்ல சதி:  காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பரப்பு குற்றம்சாட்டை வெளியிட்டுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கேவை கொல்ல சதி:  காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு


பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பரப்பு குற்றம்சாட்டை வெளியிட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். 

கலபுராகி மாவட்டத்தில் உள்ள சித்தாபூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மற்றும் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் ஆடியோ கிளிப் ஒன்றை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கர்நாடகா பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சனிக்கிழமை வெளியிட்டார்.  

அதில், அடுத்த வாரம் நடைபெறவுள்ள கர்நாடக பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்னதாக, "கார்கே மற்றும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை கொலை செய்வேன்" என்று கன்னடத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.

அடுத்து வரும் கர்நாடக தேர்தலில் தோல்வியை சந்திக்கும் பாஜக தலைவர்கள் இப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார்கள்," காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினரால் தொடர்ந்து பயமுறுத்தப்படுவதாக சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார். 

இது "வேட்கப்பட வேண்டிய கீழ்த்தரமான மிக மளிவான அரசியல் பேச்சு" என்றும், "கர்நாடகாவின் தேர்தல் பிரசாரத்தில் கொலைத் திட்டம் நுழைந்துள்ளது" என்று அவர் குற்றம் சாட்டினார். 

தேசியத் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி பேசியவரும் சாதாரணமானவரும் அல்ல. அவர் வேறு யாரும் இல்லை. "பிரமதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையின் ‘செல்லப்பிள்ளை’ சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் ரத்தோட்டின் ஆடியோ" பதிவில் இருந்து தெளிவாகிறது என்றும் அவருடைய முந்தைய வரலாறு என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் "பிரதமர் அமைதியாகவே இருப்பார் என்பதும் எனக்குத் தெரியும், கர்நாடக காவல்துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையமும் அப்படியே இருக்கும். ஆனால், கர்நாடக மக்கள் வாய்மூடியாக, அமைதியாக இருக்க மாட்டார்கள், தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று சுர்ஜேவாலா கூறினார்.

இந்த அடியோ பதிவு காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

காங்கிரஸ் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரத்தோடி, அந்த ஆடியோ போலியானது என்றும் தன்னைக் கேவலப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியினரால் புனையப்பட்டது என்றும் கூறினார். கார்கே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் கூறினார்.

மேலும், "காங்கிரஸ் கட்சியினர்  தோல்வி பயத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி சில போலி ஆடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அதில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் பொய்" என்று அவர் கூறினார்.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, "நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வோம். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

சித்தாபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட்டை, மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே எதிர்த்து போட்டியிடுகிறார் என்பதும் பிரியங்க் கார்கேவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த தயாராக இருப்பதாக கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com