கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: கெலாட் உறுதி

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தார். 
கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: கெலாட் உறுதி

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தார். 

கர்நாடகத்தில் மே 10-ம் தேதி(நாளை) புதன்கிழமை தேர்தல் நடைபெற்று மே 13-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். 

உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், 

தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். ராஜஸ்தானில் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் கூறினார்.

பொதுமக்களிடம் உணர்வுகள் எழும்போது நாம் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. 

அது, அமித் ஷாவாக இருந்தாலும் சரி, நரேந்திர மோடியாக இருந்தாலும் சரி யார் வந்தாலும் பரவாயில்லை. ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

தனது அரசால் நடத்தப்படும் பணவீக்க நிவாரண முகாம்கள் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திட்டத்தின் பலன்கள் ஒவ்வொரு பயனாளி குடும்பத்தையும் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.

கெலாட் செவ்வாய்க்கிழமை உதய்பூர் மற்றும் பில்வாரா மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களை பார்வையிட உள்ளார். 

முன்னதாக உதய்பூர் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கெலாட் வரவேற்றார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தொட்டசராவும் உடனிருந்தார்.

சிரோஹி மாவட்டத்தில் உள்ள மவுண்ட் அபுவில் காங்கிரஸின் சர்வோதய சங்கம் முகாமில் கலந்துகொள்வதற்காக காந்தி உதய்பூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com