
சிம்கார்டு மோசடி காரணமாக பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பயன்பாட்டில் இருந்து 2.25 லட்சம் செல்போன் சிம்கார்டு எண்கள் தொலைத்தொடர்பு துறையால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
பிகார் மற்றும் ஜார்க்கண்டில் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள 7 கோடி செல்போன் சிம்கார்டு பயனாளர்களின் தரவுகளை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சோதனையில் ஈடுபட்டன.
அப்போது, லட்சக்கணக்கான சிம்கார்டுகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சிம் கார்டு மோசடிக்கு எதிரான நடவடிக்கையில், ஏப்ரல் மாதத்தில் பிகார் மற்றும் ஜார்க்கண்டில் 2.25 லட்சத்திற்கும் அதிகமான செல்போன் சிம்கார்டு எண்களை தொலைத்தொடர்பு துறை செயலிழக்க செய்துள்ளது. இந்த சிம்கார்டுகளில் பெரும்பாலானவை போலியான ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டதன் விளைவாக இந்த செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 517 இடங்களில் விதிகளுக்கு மாறாக சிம்கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அவற்றின் விற்பனையாளர்களுக்கு தடை விதித்து, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட தொலைத்தொடர்புத் துறை, நாடு முழுவதும் உள்ள 87 கோடிக்கும் அதிகமான சிம்கார்டு சந்தாதாரர்களின் தரவுகளை சோதனை செய்து வருவதன் மூலம் சிம்கார்டு மோசடியில் ஈடுபடுவர்கள் மீது எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க உதவுகிறது.
செல்போன் சிம்கார்டு எண்களை செயலிழக்கச் செய்வது சட்டவிரோத அல்லது போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளின் பரவலான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.