
புதுடில்லி: ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 49 சதவீதம் அதிகரித்து ரூ.906 கோடி உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்நிறுவனம் ரூ.610 கோடி நிகர லாபம் ஈட்டியது. அதே வேளையில் நான்காவது காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.3,193 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,804 கோடியாக உள்ளது.
மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.2,914 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது 2022 நிதியாண்டில் ரூ.1,677 கோடியாக உள்ளது.
2021-22ம் நிதியாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.10,298 கோடியிலிருந்து ரூ.14,442 கோடியாக அதிகரித்துள்ளது. 2023-24ம் ஆண்டில் ரூ.1,000 கோடி ரொக்க ஒதுக்கீட்டிற்கு அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 0.25 சதவீதம் சரிந்து ரூ.3,407.05 ரூபாயாக முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.