கேரளத்தில் பணியைப் புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்!

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் இளம் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மருத்துவர்கள் பணி புறக்கணித்து வருகின்றனர். 
கேரளத்தில் பணியைப் புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்!

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் இளம் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மருத்துவர்கள் பணி புறக்கணித்து வருகின்றனர். 

இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், கடந்த 24 மணி நேரமாக மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பெரும்பாலான மருத்துவர்கள் பணிக்கு வராமல் புறக்கணித்துள்ளனர். 

கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (கேஜிஎம்ஓ) இன்று வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இதில், தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு(ஐசியு) மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகள்(ஓ.பி) சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனை சிறப்பு பாதுகாப்பு வளையங்களாக அரசு அறிவிக்க வேண்டும். பாதுகாப்பதற்கான புதிய சட்டத்தை உடனடியாக அமலுக்குக் கொண்டுவர என மருத்துவர்கள் வலியுறுத்தினர். 

இதற்கிடையில், மறைந்த மருத்துவர் வந்தனா தாஸின் உடலுக்கு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கோட்டயத்தில் உள்ள முத்துச்சிராவில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

23 வயதான மருத்துவர், கொல்லம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com