அமைச்சர்களுடன் தி கேரளா ஸ்டோரி சிறப்புக் காட்சியை பார்த்த உ.பி.முதல்வர் 

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை அமைச்சர்களுடன், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்த்தார்.
அமைச்சர்களுடன் தி கேரளா ஸ்டோரி சிறப்புக் காட்சியை பார்த்த உ.பி.முதல்வர் 

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை அமைச்சர்களுடன், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்த்தார்.

சுதீப்தோ சென் இயக்கியுள்ள ஹிந்தி திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’, கேரளப் பெண்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுவது போல் கதை பின்னணி கொண்டுள்ளது. கா்நாடக தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்தாா். 

இதனிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்தது. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் அத்திரைப்படத்துக்கு தடை விதிப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, இத்திரைப்படம் அரசியல்ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியது.  அதேசமயம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டா் பக்கத்தில் அறிவித்தார். 

தொடர்ந்து இப்படத்தின் சிறப்புக் காட்சியை யோகி ஆதித்யநாத் இன்று பார்ப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று லக்னௌவில் உள்ள லோக் பவனில் படத்தின் சிறப்புக் காட்சியை அமைச்சர்களுடன், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்த்தார். முன்னதாக, முதல்வர் யோகி புதன்கிழமை லக்னௌவில் 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினரை சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது, ​​'தி கேரளா ஸ்டோரி' படத்தை காணும்படி முதல்வர் யோகியை படக்குழுவினர் வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com