உற்பத்தியில் தரக்குறைவு: 4 மருந்துகளை விற்பனை செய்யத் தடை: ஃபைசர் நிறுவனம்

உயிர் காக்கும் 4 மருந்துகளை விற்பனை செய்யய்த் தற்காலிகமாக தடை விதித்து திரும்பப்பெறுவதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
உற்பத்தியில் தரக்குறைவு: 4 மருந்துகளை விற்பனை செய்யத் தடை: ஃபைசர் நிறுவனம்

உயிர் காக்கும் 4 மருந்துகளை விற்பனை செய்யய்த் தற்காலிகமாக தடை விதித்து திரும்பப்பெறுவதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்தியின்போது ஏற்பட்ட தரக்குறைவு காரணமாக மருந்துகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர், இந்தியாவில் மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. குஜாராத்தின் வதோதரா பகுதியில் ஃபைசர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. 

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்தில் தரக்குறைபாடு கண்டறிந்ததன் எதிரொலியாக இந்த ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட 4 மருந்துகளை விற்பனை செய்ய வேண்டாம் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேக்னஸ், சைசோன், மேக்னமைசின், மேக்னஸ் ஃபோர்ட் ஆகிய நான்கு உயிர் காக்கும் மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு ஃபைசர் கேட்டுக்கொண்டுள்ளது. 

மருத்துவமனைகளில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு இந்த மருந்துகள் வழங்கப்படும்.

குஜராத்தில் ஆஸ்ட்ரல் ஸ்டெரிடெக் ஆலையில் உற்பத்தியின்போது ஏற்பட்ட தரக்குறைபாடு காரணமாக இந்த 4 மருந்துகளுக்கும் தற்காலிகமாக தடை விதிப்பதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேக்னஸ் மருந்து பல்வேறு விதமான பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ் காய்ச்சல்களுக்கு வழங்கப்படுகிறது. 

சைசோன் மருந்து, வயிற்றுவலி, தோல் நோய், சிறுநீரகத் தொற்று போன்ற பல்வேறுவிதமான பாக்டீரியா தொற்றுகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

காது, தொண்டை, நுரையீரல் போன்றவை பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்பட்டால், மேக்னமைசின் மற்றும் மேக்னஸ் ஃபோர்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com