118 கி.மீ. நெடுஞ்சாலை: 100 மணி நேரத்தில் போட்டு சாதனை! - என்ன பயன்?

காஸியாபாத் - அலிகார் இடையே 100 கிலோ மீட்டர் தூரத்துக்கான கான்கிரீட் சாலையை 100 மணிநேரத்தில் முடித்து நெடுஞ்சாலைத் துறை சாதனை படைத்துள்ளது. 
118 கி.மீ. நெடுஞ்சாலை: 100 மணி நேரத்தில் போட்டு சாதனை! - என்ன பயன்?
Published on
Updated on
1 min read


காஸியாபாத் - அலிகார் இடையே 100 கிலோ மீட்டர் தூரத்துக்கான கான்கிரீட் சாலையை 100 மணிநேரத்தில் முடித்து நெடுஞ்சாலைத் துறை சாதனை படைத்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் - அலிகார் இடையே தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மிகவும் அதிக மக்கள் தொகை மற்றும் வாகன போக்குவரத்துக்கொண்டதால், காஸியாபாத் - அலிகார் இடையே அமைக்கப்படும் இந்த சாலை மிகப்பெரும் உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது. 

இந்நிலையில், காஸியாபாத் - அலிகார் இடையேயான 118 கிலோமீட்டர் சாலையை 100 மணி நேரத்தில் முடித்து நெடுஞ்சாலைத் துறை சாதனை படைத்துள்ளது. 

மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி இதனை சுட்டுரையில் படங்களுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 100 மணிநேரத்தில் முடிக்கப்பட்ட பணி, சாலை போக்குவரத்துத் துறை பணியாளர்களின் உழைப்பு மற்றும் முன்திட்டமிடலைக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யபப்ட்ட நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பங்கேற்ற அமைச்சர் நிதின் கட்காரி, அதிக மக்கள் தொகை கொண்ட காஸியாபாத் - அலிகார் நகர மக்களுக்கு இந்த 118 கிலோமீட்டர் சாலை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். 

உத்தரப் பிரதேசத்தின் டாப்ரி, கெளதம புத்தா நகர், செகந்திராபாத், புலந்த்சாஹர், குர்ஜா உள்ளிட்ட நகரங்களின் வழியே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் வணிகத்தை பெருக்கும் வகையில், பல்வேறு பொருள்களை பரிமாற்றம் செய்வதற்கும், பயணிப்பதற்கும் உகந்த சாலையாக இது அமையும். 

இதன்மூலம், எரிபொருள் பயன்பாட்டு அளவு குறைந்து கார்பன் -டை- ஆக்ஸைடு அளவு குறையும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com