சிசோடியாவிற்கு ஜூன் 1 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மனீஷ் சிசோடியாவிற்கு ஜூன் 1 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மனீஷ் சிசோடியாவிற்கு ஜூன் 1 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசின் கலால் ஊழல் வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலால் ஊழல் வழக்கில் மனீஷ் சிசோடியாவை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 9 -ஆம் தேதி கைது செய்தது.

தில்லி கலால் கொள்கை 2021-22-ஐ உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டாா். தற்போது அவா் நீதிமன்றக் காவலில் உள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com