புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கக்கூடாது என ஹைதராபாத் எம்.பி.யும் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை வருகின்ற மே 28 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய அசாதுதீன் ஓவைசி, மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா இருக்கிறார். அவர்தான் நாடாளுமன்ற கட்டடத்தைத் திறக்க வேண்டும். நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி பின்வாங்க வேண்டும் என அவருக்கு கோரிக்கைவைக்கிறேன். அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன் என்பதை மக்களுக்கு மோடி இதில் நிரூபிக்க வேண்டும்.
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவரே நாடாளுமன்ற கட்டடத்தைத் திறக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு எதிப்பு தெரிவித்து புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.