புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கட்சி நிகழ்ச்சியல்ல: சஞ்சய் ரௌத்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா என்பது தேசிய நிகழ்வு எனவும், ஒரு கட்சியின் தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கட்சி நிகழ்ச்சியல்ல: சஞ்சய் ரௌத்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா என்பது தேசிய நிகழ்வு எனவும், ஒரு கட்சியின் தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (மே 28) திறந்துவைக்க உள்ளார். இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா என்பது தேசிய நிகழ்வு எனவும், ஒரு கட்சியின் தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக சஞ்சய் ரௌத் பேசியதாவது: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. இந்த திறப்பு விழாவுக்கு ஏன் குடியரத் தலைவர் அழைக்கப்படவில்லை என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். குடியரசு துணைத் தலைவர் எங்கே? மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் பெயர் அழைப்பில் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பின் தலைவராக உள்ள குடியரசுத் தலைவரே இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும். தங்களது இந்த செயலுக்கு பாஜக, இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்ததை காரணமாகக் கூறுகிறது என்றார்.

நாடாளுமன்ற கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைப்பார் என மத்திய அரசு உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com