புதிய நாடாளுமன்ற கட்டடம்: மயில் வடிவில் மக்களவை; தாமரை வடிவில் மாநிலங்களவை!

புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் சிறப்பு அம்சங்களாக மயில் வடிவில் மக்களவையும்; தாமரை வடிவில் மாநிலங்களவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.புதுதில்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் சிறப்பு அம்சங்களாக மயில் வடிவில் மக்களவையும்; தாமரை வடிவில் மாநிலங்களவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

புதுதில்லியில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திருவாவடுதுறை ஆதினத்தால், பண்டித நேருக்கு அளிக்கப்பெற்ற செங்கோல் தற்போது பிரதமா் நரேந்திரமோடியால் நிறுவப்பட்டுள்ளது. 

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பு அம்சங்கள்: 

* புதிய நாடாளுமன்ற கட்டடம் நான்கு தளங்களைக் கொண்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1,250 கோடி. இதன் மொத்த பரப்பளவு 65 ஆயிரம் சதுர மீட்டர். 

* இந்த கட்டடத்தை கட்டுவதற்காக 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

* இந்த கட்டடத்தின் ஆயள் காலம் 150 ஆண்டுகள். இந்த கட்டடத்தில் நாட்டின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. 

* ராஜஸ்தானில் இருந்து சிவப்பு, வெள்ளை மார்பிள் கற்கள்,  உதய்பூரில் இருந்து கேஷரியா பச்சை நிற கற்களும்,  ஆஜ்மீரில் இருந்து சிவப்பு நிற கிரானைட் கற்களும், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து ஜல்லிக் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

* கட்டடத்தின் மேற்கூரைக்கான உருக்கு டாமன்-டையூவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

* குஜராத்தில் பித்தளை வேலைகளும், மும்பையில் மேசை, இருக்கைகள் செய்யும் பணி நடந்தது. 

* அசோகர் சின்னத்துக்கான பொருள்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

* கட்டடத்தின் கட்டுமான பணிக்கு தேவையான எம்சான்ட் மணல் ஹரியாணாவில் இருந்தும்,  சிமென்ட் கற்கள் ஹரியாணா, த்தரப்பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. 

* 2020 டிசம்பர் 10 ஆம் தேதி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

* புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. 

* மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com