நாட்டிலேயே தில்லியில்தான் அதிக சாலை விபத்துகள்!

2022 தரவுகளின்படி 68 சதவிகித சாலை விபத்துகள் கிராமப்புறப் பகுதிகளில் நடந்துள்ளது. 32 சதவிகித விபத்துகள் நகர்புறங்களில் நடந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

2022 தரவுகளின்படி நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடப்பது தில்லியில்தான் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது, போதைப்பொருள், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்பாடு போன்றவையே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய சாலை போக்குவரத்துத் துறையில் பதிவாகியுள்ள சாலை விபத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், மற்ற நகரங்களைக் காட்டிலும் தில்லியில் அதிக சாலைவிபத்துகள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022 தரவுகளின்படி தில்லியில் 5,652 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் 4,680 விபத்துகள். மத்தியப் பிரதேசத்தின் ஜபால்பூரில் 4,046, கர்நாடகத்தின் பெங்களூருவில் 3,822, சென்னை 3,452, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் 3,313, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 2,687, ஹைதராபாத்தில் 2,516, கேரளத்தின் கொச்சியில் 2,432 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 

பதிவாகியுள்ள மொத்த விபத்துகளில் மேற்குறிப்பிட்ட 10 நகரங்களில் நடந்த விபத்துகள் மட்டும் 46.37 சதவிகிதமாக உள்ளது. 

இந்த சாலை விபத்துகளில் 17,089 உயிரிழந்துள்ளனர். 69,052 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

2022 தரவுகளின்படி 68 சதவிகித சாலை விபத்துகள் கிராமப்புறப் பகுதிகளில் நடந்துள்ளது. 32 சதவிகித விபத்துகள் நகர்புறங்களில் நடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com