ஆண் குழந்தைக்காக மாத்திரை: பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

ரூபி (35), தனது கணவரின் வற்புறுத்தல் காரணமாக ஆண் குழந்தை பிறப்பதற்கென மாத்திரைகள் சாப்பிட்ட நிலையில், அவரது சிறுநீரகங்கள் செயலிழந்திருக்கின்றன.
ஆண் குழந்தைக்காக மாத்திரை: பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
Published on
Updated on
1 min read


ஆக்ரா: மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயாரான ரூபி (35), தனது கணவரின் வற்புறுத்தல் காரணமாக ஆண் குழந்தை பிறப்பதற்கென மாத்திரைகள் சாப்பிட்ட நிலையில், அவரது சிறுநீரகங்கள் செயலிழந்திருக்கின்றன.

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, ஏராளமான அலோபதி மருந்துகளையும், இயற்கை மூலிகைகளையும் கலந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்ததான் காரணமாக, இருந்து சிறுநீரகங்களும் செயல்பட முடியாத அளவுக்கு மோசமடைந்துவிட்டன.

கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் ரூபி, இதற்காக அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று கணவர் குடும்பத்தார் கொடுமை செய்ததாகவும், தற்போது மருத்துவ செலவுக்குக் கூட அவர்கள் உதவவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கொடுக்கும் மாத்திரைகளை சாப்பிடாவிட்டால், 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டியதால்தான் மாத்திரைகளை சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com