
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஆரம்பகட்ட மற்றும் இடைநிலை ஊழியர்கள், மாதத்தில் குறைந்தது 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாரத்தின் 5 நாள்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவுறித்தியதைத் தொடர்ந்து, தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய மென்பொருள் நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு நகரங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஆரம்பகட்ட மற்றும் இடைநிலை ஊழியர்கள் இனி மாதத்திற்கு குறைந்தது 10 நாள்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், அலுவலகத்தில் இருந்தவாறு பணிபுரியும் சூழலை வலுவாக்கும் முயற்சியை நோக்கிச் செல்கிறோம். இதனால், ஆரம்பகட்ட மற்றும் இடைநிலை ஊழியர்கள் நவம்பர் 20ஆம் தேதிமுதல் மாதத்துக்கு 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.