அரசுப் பல்கலையில் இலவச வைஃபை வசதி: ஒடிசா அரசு

அரசுப் பல்லைகக்கழக வளாகங்களில் இலவச வைஃபை வசதி வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. 
அரசுப் பல்கலையில் இலவச வைஃபை வசதி
அரசுப் பல்கலையில் இலவச வைஃபை வசதி

அரசுப் பல்லைகக்கழக வளாகங்களில் இலவச வைஃபை வசதி வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. 

அனைத்து அரசுப் பல்லைக்கழகங்களின் பதிவாளர்களும் வளாகங்களில் வைஃபை வசதிகளை நிறுவுவதற்கான விரிவான மதிப்பீடுகளை வழங்குமாறு உயர்கல்வித் துறையின் சிறப்புச் செயலர் ராமகாந்த நாயக் கேட்டுக் கொண்டுள்ளார். 

மாணவர்களுக்கு பெரும்பாலான ஆய்வுகள் தற்போது ஆன்லைனில் இ-புத்தங்களாகவே உள்ள நிலையில், அரசுப் பல்கலையில் இலவச வைஃபை வசதி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

முன்னதாக உத்கல் பல்கலைக்கழகம் மற்றும் ரமா தேவி மகளிர் பல்கலைக்கழக வளாகங்களில் இலவச வைஃபை வழங்கிவரும் நிலையில், சமீபத்திய நடவடிக்கைகள் மூலமாக மற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இது பயனளிக்கும். 

அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இலவச வைஃபை மற்றும் 1 ஜிபி டேட்டா வழங்குவதாக கடந்த 2019 பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜேடி வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com