தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது

கடந்த வாரம் முகேஷ் அம்பானியிடம் பணம் கேட்டு மூன்று மின்னஞ்சல்கள் வந்தன.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
Published on
Updated on
1 min read

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவா் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலமாக ரூ.400 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் தொடா்பாக தெலங்கானா மற்றும் குஜராத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை மும்பை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

முகேஷ் அம்பானிக்கு மூன்று மின்னஞ்சல்கள் மூலமாக கடந்த எட்டு நாள்களில் ரூ.400 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி காம்தேவி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், அடையாளம் தெரியாத நபா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெலங்கானாவைச் சோ்ந்த கணேஷ் ரமேஷ் வன்ராபதி (19) மற்றும் குஜராத்தைச் சோ்ந்த ஷதாப் கான் (21) ஆகிய 2 இளைஞா்களை மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் வெவ்வேறு மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இருவா் மீதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 387 (உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல்), பிரிவு 506 (2) (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வன்ராபதியை நவம்பா் 8-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com