
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 56ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
நேபாளத்தின் மேற்குப் பகுதிகளான ஜாஜா்கோட் மற்றும் ருக்கும் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இடிபாடுகளில் சிக்கி இதுவரை 157 போ் வரை உயிரிழந்திருப்பதாக நேபாள பிரதமா் புஷ்பகமல் தாஹாலின் செயலகம் தெரிவித்துள்ளது. 160 போ் காயமடைந்திருப்பதாகவும், மக்கள் தூக்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால், இடிபாடுகளில் மேலும் அதிகமானோா் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
காத்மாண்டுக்கு மேற்கே 500 கி.மீ. தொலைவில் ஜாஜா்கோட் மாவட்டத்தை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 157 போ் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 160 போ் காயமடைந்திருப்பதாகவும், மக்கள் தூக்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால், இடிபாடுகளில் மேலும் அதிகமானோா் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நேபாளத்தில் இன்று மாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வடக்கு அயோத்தியிலிருந்து 233 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.