சத்தீஸ்கர், மிஸோரம் வாக்குப்பதிவு: காலை 11 மணி நிலவரம் என்ன?

காலை 11 மணி நிலவரப்படி சத்தீஸ்கர் முதற்கட்டத் தேர்தலில் 22.97% வாக்குகளும் மிஸோரத்தில் 26.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 
மிஸோரத்தில் வாக்களிக்க வரிசையில் நின்ற மக்கள்.
மிஸோரத்தில் வாக்களிக்க வரிசையில் நின்ற மக்கள்.

காலை 11 மணி நிலவரப்படி சத்தீஸ்கர் முதற்கட்டத் தேர்தலில் 22.97% வாக்குகளும் மிஸோரத்தில் 26.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

சத்தீஸ்கா் மாநிலத்தில் நாராயண்பூா், தண்டேவாடா, பிஜபூா், கோன்டா, கேன்கா் உள்ளிட்ட 10 தொகுதிகளில் இன்று காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரையும், இதர 10 தொகுதிகளில் காலை 7 முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி சத்தீஸ்கர் மாநில முதற்கட்டத் தேர்தலில் 22.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதுபோல, மிஸோரமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. 

மிஸோரத்தில் காலை 11 மணி நிலவரப்படி, 26.43% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com