70 மணிநேர வேலையில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் எல்லாம்...: மனீஷ் திவாரி!

மனீஷ் திவாரி வாரத்திற்கு 70 மணிநேர வேலை குறித்த விவாதத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மனீஷ் திவாரி
மனீஷ் திவாரி

காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான மனீஷ் திவாரி, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்தை வலியுறுத்தி தனது எக்ஸ் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, 70 மணி நேரம் இந்தியர்கள் வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்திப் பேசினார்.

சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்திய இந்தக் கருத்துக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் மனீஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில், “நாராயணமூர்த்தியின் கருத்துக்கு இதற்கு இத்தனை கூச்சல் என எனக்கு புரியவில்லை. இதில் என்ன தவறு இருக்கிறது. என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான பணியில் வாரம் ஏழு நாள்களும் நாளொன்றுக்கு 12 முதல் 15 மணி நேரங்கள் வேலை செய்கிறோம். ஞாயிற்றுகிழமை நான் கடைசியாக விடுப்பு எடுத்தது எப்போது என எனக்கு நினைவில்லை. ஞாயிறும் எங்களுக்கு முழு வேலை நாள் தான். பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் இது தான் நிலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனீஷ் திவாரியின் பதிவு
மனீஷ் திவாரியின் பதிவு

மேலும், “இந்தியா வலுவான நாடாக மாற ஒன்று அல்லது இரண்டு தலைமுறையினர் வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும். 70 மணி நேர வேலை, ஒரு நாள் விடுப்பு மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை 15 நாள்கள் சுற்றுலா என வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com