உஸ்பெகிஸ்தானில் மருத்துவம் படிக்கும் 1,000 இந்திய மாணவர்கள்!
உக்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களில் ஆயிரம் பேர் உஸ்பெகிஸ்தானில் தங்களது மருத்துவப் படிப்பைத் தொடர்கின்றனர்.
உக்ரைன் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் உஸ்பெகிஸ்தானில் பயில உஸ்பெகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகம் உதவியுள்ளது. உக்ரைன் பல்கலைக் கழகத்திலிருந்து உஸ்பெகிஸ்தான் பல்கலைக் கழகங்களுக்கு மாற்றும் பணிகளை தூதரகம் எளிமையாக்கியது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்து பணிபுரிந்து, பயின்று வந்த இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்திய அரசு அவர்களை மீட்டது.
போர் மூண்டபோது சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனில் தங்கி மருத்துவம் படித்துவந்ததாக கூறப்படுகிறது. இதில், 2,000 மாணவர்கள் மீண்டும் தங்களின் படிப்புக்காக உக்ரைன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.