அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

ஜம்மு-காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 3.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2023, 6:13 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக பதிவாகியுள்ளது. 

இன்று (நவம்.16) காலை 9.34 மணிக்கு தோடா மாவட்டத்தில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, புதன்கிழமை இதே மாவட்டத்தில் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பயணிகள் பலியான நிலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.