முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 70 இடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்தலின் போது, நடந்து வரும் மத்தியபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!


சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 70 இடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்தலின் போது, நடந்து வரும் மத்தியபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் முதல்கட்டமாக நக்ஸல் பாதிப்பு மிகுந்த 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், எஞ்சிய 70 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டம் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தோ்தலில் மொத்தம் 958 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

5.6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்காக மாநிலம் முழுவதும் 64,000-க்கும் மேல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சத்தீஸ்கர், மத்தியபிரதேசத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மத்தியப் பிரதேசத்தில் அனைத்து தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் உற்சாகத்துடம் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் நேர்ந்திர மோடி, முதல் தலைமுறை வாக்காள இளைஞர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளையும் தெரிவித்தார். 

சத்தீஸ்கரில் சாதனை படைக்கும் பங்களிப்பை வலியுறுத்தி, அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்துமாறும், ஒவ்வொரு வாக்கும் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை என மோடி வலியுறுத்தியுள்ளார். 

ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் முடிவுகள் டிசம்பர் 3 -ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com