கோப்புப் படம்.
கோப்புப் படம்.

முகமது ஷமி கிராமத்தில் உயர்தர மைதானம்: உ.பி. துணை முதல்வர்

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் கிராமத்தில் விரைவில் உயர்தர மைதானம் கட்டப்படும் என்று உத்திர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.  

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் கிராமத்தில் விரைவில் உயர்தர மைதானம் கட்டப்படும் என்று உத்திர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது, முகமது ஷமியின் கிராமத்தில் மைதானம் கட்டும் பணியில் உத்திர பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது. நிலம் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் உயர்தர மைதானம் கட்டப்படும் என்றார். 
இதுதொடர்பான அறிவிப்பையும் அம்ரோஹா மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தியாகி வெள்ளிக்கிழமை வெளியிட்டார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமி ஜொலித்து வருகிறார். 
வெறும் 6 போட்டிகளில் விளையாடி அவர் இதுவரை 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில்  ஒரு 4 விக்கெட்டுகளும், மூன்று 5 விக்கெட்டுகளும் அடங்கும். 
நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் அவர் வலம் வருகிறார். முகமது ஷமி, உத்திர பிரதேசம் மாநிலம், அம்ரோஹாவில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com