தெலங்கானாவின் இந்த நிலைமைக்கு கேசிஆர்தான் காரணம்: நிர்மலா சீதாராமன்

தெலங்கானா தேர்தலையொட்டி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திரசேகர் ராவ் குறித்து பேசியுள்ளார்.
தெலங்கானாவின் இந்த நிலைமைக்கு கேசிஆர்தான் காரணம்: நிர்மலா சீதாராமன்

உபரி வருவாய் மாநிலமாக இருந்த தெலங்கானா, பற்றாக்குறை வருவாய் கொண்ட மாநிலமாக மாறக் காரணம், முதல்வர் சந்திரசேகர் ராவ்தான் எனக் குற்றம் சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

மல்கஜ்கிரி பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டத்தில் பங்கெடுத்த நிர்மலா சீதாராமன் பேசியபோது இந்த நிலைமையால் தெலங்கானாவின் அடுத்த இரு தலைமுறைகள் பாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவித்தாவது,  “மதுபானம், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கூடாது எனக் குரல் கொடுத்த மாநிலங்களில் தெலங்கனாவும் ஒன்று. அவை ஜிஎஸ்டிக்குள் வந்திருந்தால் நியாயமான விலையில் கிடைத்திருக்கும்.

வருவாய், எப்படியும் மாநிலத்துக்குத்தான் வரப் போகிறது. 2014-ல் மாநிலம் உருவாக்கப்படும்போது உபரி வருவாய் கொண்ட மாநிலமாக இருந்தது. இப்போது பற்றாக்குறை வருவாய் ஈட்டும் மாநிலமாக மாறியுள்ளது. இதற்கான புகழ் கேசிஆரையே சேரும். இன்று தெலங்கானா கடன் மிகுந்த மாநிலம். அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகள் வரை இந்தக் கடனை சுமக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாதுகாப்பு படையினரிடமிருந்து குண்டு நுழையாத கவசங்கள் மட்டுமல்ல, பாதுகாப்பு கருவிகளும் பறிக்கப்பட்டுள்ளன, 10 வருடங்களுக்கு மேலாக எந்தவித கொள்முதலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com