நடப்பாண்டில் 13 வீரர்கள் பலி! 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீருக்கு உட்பட்ட 3 மாவட்டங்களில் இந்த ஆண்டில் மட்டும் 45 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில், பதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் உள்பட 22 பயங்கரவாதிகள் அடங்குவர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜம்மு - காஷ்மீருக்கு உட்பட்ட 3 மாவட்டங்களில் இந்த ஆண்டில் மட்டும் 45 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில், பதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் உள்பட 22 பயங்கரவாதிகள் அடங்குவர். 

ஜம்மு - காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தின் பஜிமால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில், ராணுவத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். 

இதேபோன்று ரஜெளரியின் பூஞ்ச் எல்லைக்குட்பட்ட மெந்தஹார் வனப்பகுதியில் ஏப்ரல் 20 மற்றும் மே 5 ஆகிய தேதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 கமாண்டோக்கள் உள்பட 10 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

அரசுத் தகவல்களின்படி, ரஜெளரி, பூஞ்ச், ரியாசி மாவட்டங்களில் கடந்த ஜனவரி முதல் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ராணுவ தாக்குதலில், 45 பேர் உயிரிழந்தனர். 

இதில், ரஜெளரியில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள், 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ரியாசியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இதில், அதிகப்படியான தாக்குதல்கள் எல்லைப் பகுதியைத் தாண்டி நுழைந்ததற்காக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com