தலிபான்களைப் போல.. ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளின் நிலை இதுவா?

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் அதிரடியாக சோதனை நடத்திய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
தலிபான்களைப் போல.. ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளின் நிலை இதுவா?


பெங்களூரு: பெங்களருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் அதிரடியாக சோதனை நடத்திய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆர்டிநகர் போஸ்ட் பகுதியில் இயங்கி வந்த அந்த இல்லத்தில், சுமார் 200 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனைவரும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

படுக்கை வசதி, விளையாட, தொலைக்காட்சிப் பார்க்கவும், விளையாட்டு அரங்கில் விளையாடவும் அனுமதிக்கப்படாமல், இஸ்லாமிய முறையில் மட்டும் கல்வி கற்பிக்கப்பட்டு, எந்த கல்வி மையத்துக்கும் குழந்தைகள் பாடம் பயில அனுப்பப்படாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 19ஆம் தேதி ஆணைய அதிகாரிகள் குழு அந்த இல்லத்துக்குச் சென்றுள்ளனர். கர்நாடக முதன்மைச் செயலருக்கு இக்குழுவினர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் இயங்கும் மோசமான ஆதரவற்றோர் இல்லங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறது.

உடனடியாக இது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும் வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து குழந்தை ஊரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகள் தலிபான்களைப் போன்றதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். எந்த அரசியலமைப்புச் சட்டத்திலும் இவ்வாறு எழுதப்படவில்லை. அங்குள்ள வார்டன் வரும்போது இளம் குழந்தைகள் கண்டு நடுங்குகின்றன. கண்களை மூடிக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறார்கள். காலையில் 3.30 மணிக்கெல்லாம் எழுப்பிவிடப்படுகிறார்கள் என்று ஆணையம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்களுக்கு இஸ்லாமிய கல்வி போதிக்கப்படுவதாகவும், அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஆதரவற்றோர் இல்லத்தின் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாகவும், இவர்களே பள்ளிகளை நடத்துவதாகவும், ஆனால், இந்த ஆதரவற்ற பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை ஒட்டுமொத்தமாக மறுத்திருக்கிறது ஆதரவற்றோர் இல்ல நிர்வாகம். எங்கள் இல்லத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் எங்களை பாராட்டிச் சென்றதாகவும், இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களைப் பயில்வதாகவும் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com