தடை செய்யப்பட்ட அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார்: மேகாலயா துணை முதல்வர் அறிவிப்பு

தடை செய்யப்பட்ட அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக மேகாலயா மாநில துணை முதல்வர் பிரெஸ்டோன் தின்சோங் தெரிவித்தார். 
தடை செய்யப்பட்ட அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார்: மேகாலயா துணை முதல்வர் அறிவிப்பு

தடை செய்யப்பட்ட அமைப்பான ஹெச்.என்.எல்.சி-யுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக மேகாலயா மாநில துணை முதல்வர் பிரெஸ்டோன் தின்சோங் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார். 

தங்கள் அமைப்பிற்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை அரசு கைவிடாதவரை, தங்களால் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்று ஹின்னீட்ரெப் தேசிய விடுதலை அமைப்பு தலைவர் பாபி மார்வின் மற்றும் அதன் பொதுச் செயலாளர் சைங்குபார் ஆகியோர் தெரிவித்த நிலையில் மேகாலயா முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார். 

தடை செய்யப்பட்ட ஹெ.என்.எல்.சி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உள்துறை செயலாளருடன் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஆலோசித்தார். 

அதற்கு முன்பாக எந்தவித முன் நிபந்தனைகளும் இன்றி மேகாலயா அரசுடனும், மத்திய அரசுடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஹெச்.என்.எல்.சி. அமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய அரசியலமைப்புக்குட்பட்டு மத்திய அரசுடனும், மேகாலயா அரசுடனும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தயாராக உள்ளோம் என்று அதில் கூறியிருந்தது. 

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது தேசிய விடுதலை அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக மேகாலயா துணை முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான பிரெஸ்டோன் தின்சோங் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com