விஷப்பாம்பை விட்டு மனைவி, மகளைக் கொன்ற கணவர் கைது!

ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் விஷப்பாம்பை விட்டு மனைவி, மகளை கடிக்கச் செய்து கொன்ற கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் விஷப்பாம்பை விட்டு மனைவி, மகளை கடிக்கச் செய்து கொன்ற கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கபிசூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா(25), இவரது மனைவி பசந்தி பத்ரா(23). இருவருக்கும் கடந்த 2020ல் திருமணம் நிகழ்ந்துள்ளது. இவர்களுக்கு தெபஸ்மிதா என்ற இரண்டு வயது மகளும் உள்ளார். 

கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்துள்ளது. இதனிடையே கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக மனைவி, மகளை விஷப் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தந்தை புகாரளித்ததையடுத்து, கணேஷை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது. 

இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், பாம்பாட்டியை சந்தித்து பூஜை செய்வதற்காக என்று கடுமையான விஷப்பாம்பை கணேஷ் வாங்கியுள்ளார். 

இதையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி மனைவி, மகள் படுத்திருந்த அறையில் பாம்பை விட்டு, இவர் மற்றொரு அறையில் தூங்கியுள்ளார். மறுநாள் மனைவியும், மகளும் இறந்துவிட்டனர் என்று கணேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட கணேஷை போலீஸார் கைது செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com