உத்தரகண்ட் சுரங்க மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்!

உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
உத்தரகண்ட் சுரங்க மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்!

உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் வியாழக்கிழமை (நவ.23) இரவு மீண்டும் திடீா் சிக்கல் ஏற்பட்டது. 

துளையிடும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இறுதிக்கட்ட மீட்புப் பணிகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

துளையிடும் பாதையில் கடந்த புதன்கிழமை இரவு இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் துளையிடும் இயந்திரத்தின் பிளேடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இடையூறு ஏற்படுத்திய இரும்புக் கம்பிகள் வியாழக்கிழமை காலை அகற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மீதமுள்ள 6 மீட்டா் தொலைவுக்கு குழாயைச் செலுத்த, துளையிடும் பணிகள் வியாழக்கிழமை நண்பகல் மீண்டும் தொடங்கப்பட்டது. பாதையில் வேறெந்த புதிய இடையூறுகளும் இல்லாத சூழலில் இந்தப் பணிகள் 12 முதல் 14 மணிநேரத்தில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 30 மணி நேரத்திற்கு பிறகு சுரங்கப் பாதையில் துளையிடும் பணி தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓஎன்ஜிசி இயக்குநர் சஞ்சய் பட், "இன்றைக்குள் மீட்புப் பணி முடிந்து தொழிலாளர்கள் பத்திரமாக வெளியே கொண்டு வரப்படுவார்கள் என்று நம்புகிறோம். தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்றும், தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்" என்றும் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com