ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பியில் அம்பேத்கர் சிலை உடைப்பு, வழக்கு பதிவு செய்யப்பட்டது!

உத்தர பிரதேச மாநிலத்தில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :26 நவம்பர் 2023, 12:33 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம் கவுஸ்ஹம்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் டாக்டர். அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

சித்தாப்பூர் கிராம மக்கள் அம்பேத்கர் சிலையின் கை விரல்கள் மற்றும் கையில் இருக்கும் புத்தகம் ஆகிய பகுதிகள் சேதமடைந்திருப்பதைக் கவனித்தனர். உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்த உடனேயே சிலையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதியின் வட்ட அதிகாரி யோகேந்திர கிருஷ்ண நாராயண் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சனிக்கிழமை இரவு இந்தச் சேதம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், காவல்துறையினர் இது குறித்து ஆய்வு நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.