தெலங்கானா ஏழைகளின் எதிரி கே.சி.ஆர்: பிரதமர் மோடி பேச்சு

பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ் தெலங்கானா ஏழைகளின் எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 
தெலங்கானா ஏழைகளின் எதிரி கே.சி.ஆர்: பிரதமர் மோடி பேச்சு

தெலங்கானா மாநிலம் ஆயிரக்கணக்கான கோடி கடனில் மூழ்கியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்யாத பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு தெலங்கானா ஏழைகளின் எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

தெலங்கானா பேரவைத் தோ்தலையொட்டி நிர்மலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டாா்.

கூட்டத்தில் அவா் ஆற்றிய உரையில், தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் ஆட்சியில் மாநிலம் ஆயிரக்கணக்கான கோடி கடனில் மூழ்கியுள்ளது. தெலங்கானா பாசன ஊழல்களுக்கு பெயர் பெற்றது. மாநிலத்தின் வளர்ச்சி, எதிர்காலம் குறித்து கவலைப்படுவதில்லை. மாநில வளர்ச்சிக்கான எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. தனது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள சந்திரசேகா் ராவை மாற்றுவதற்கு மாநில மக்கள் விரும்புகின்றனர். 

முதல்வர் சந்திரசேகர் ராவ் ஏழைகளின் எதிரி. அவர் மக்களுக்கு துரோகத்தைத் தவிர, எதுவும் செய்யவில்லை. மக்களை சந்திக்காத முதல்வர் தெலங்கானாவுக்கு தேவையா? பண்ணை இல்லத்தில் இருந்துகொண்டு ஏழைகளுக்கு வீடுகள் அளிக்காத, தலைமைச் செயலகத்துக்கு வராத  முதல்வர் தெலங்கானாவுக்கு தேவையா? என கூட்டனத்தினரை பார்த்து கேட்ட பிரதமர் மோடி,  வரும் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும். தெலங்கானாவில் தாமரை மலரும். 

பொம்மைகள் ஏற்றுமதியில் நாடு புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால், ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். சந்திரசேகர் ராவ் அரசு ஏழைகளின் வளர்ச்சியை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர், தெலங்கானா ஏழைகள் மீது பாஜக அக்கறை கொண்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் ஏழைகளுக்கான வளர்ச்சிப் பணிகளுக்கு பிஆர்எஸ் அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்றார். 

நிஜாமாபாத்தை மஞ்சள் நகரமாக மாற்றுவதாகவும், இங்குள்ள மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், மஞ்சள் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை குறிப்பிட்டு பேசிய மோடி, தெலங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

நிர்மல் மாவட்டம் ஒரு காலத்தில் பொம்மைகள் மற்றும் பீரங்கிகளை தயாரிப்பதில் புகழ் பெற்றது. நாடு முழுவதும் உள்ள வீடுகளில் ஓவிய அறைகளை அலங்கரிக்க நேர்த்தியாக செதுக்கப்பட்ட உருவங்களும் ஓவியங்களும் பயன்படுத்தப்பட்டன.

நிர்மல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொம்மைத் தொழிலை பிஆர்எஸ் அழித்து வருவதாகவும் குற்றம் சாட்டிய பிரதமர், “இன்று இந்தியா பொம்மை ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்து வரும் நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்ததும், புத்துயிர் பெறுவதற்கான பிரசாரத்தை தொடங்குவோம் என்றார். 

தெலங்கானாவின் 119 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com