ராணுவ வீரர்கள் மரணத்தின்போது, பிரதமர் தேஜஸ் விமானத்தில் சவாரி செய்து கொண்டிருக்கிறார்: ஒவைசி விமர்சனம்

ரஜௌரியில் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கும்போது, பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் சவாரி செய்து கொண்டிருக்கிறார் என்று அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

ரஜௌரியில் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கும்போது, பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் சவாரி செய்து கொண்டிருக்கிறார் என்று அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி சனிக்கிழமை பயணம் செய்தார். இதனைக் குறிப்பிட்டு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சனம் செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அசாதுதீன் ஒவைசி, “ரஜௌரியில் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கும்போது, பிரதமர் மோடி பெங்களூரில் தேஜஸ் விமானத்தில் மகிழ்ச்சியாக சவாரி செய்து கொண்டிருப்பது பொறுப்பற்றது.

அதேபோல இந்த நேரத்தில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கு பாஜகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அவரின் தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகிறார்.” என்று விமர்சனம் செய்தார்.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com