
டிச.1ஆம் தேதி முதல் பெங்களுரூவில் இருந்து சபரிமலைக்கு சொகுசுப் பேருந்து இயக்கப்படும் என்று கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. வரும் டிசம்பா் 27-ஆம் தேதி வரை திறந்திருக்கும் இந்தக் காலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்கச் செல்வா்.
இந்த நிலையில் டிச.1ஆம் தேதி முதல் பெங்களுரூவில் இருந்து சபரிமலைக்கு சொகுசுப் பேருந்து இயக்கப்படும் என்று கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சாந்திநகரா பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்படும் பேருந்து, மறுநாள் காலை 6.45 மணிக்கு நிலக்கல் சென்றடையும். பின்னர் மறுமார்க்கமாக நிலக்கல்லில் இருந்து மாலை 6 மணிக்கு பேருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ஒருவருக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.1,600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.