
ஜார்க்கண்டின் மேதினிநகரில் உள்ள பாலமு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலமு மாவட்டத்தின் மானாடு காவல் நிலையப் பொறுப்பாளர் கமலேஷ் குமார் கூறுகையில்,
திரிதியா சம்மேளன பிரஸ்துதி கமிட்டியின் (டிஎஸ்பிசி), சிபிஐயின் (மாவோயிஸ்ட்) பிரிந்த குழுவின் தளபதி கிஸ்லே சிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலாமு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கிஸ்லே சிங் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறை நிர்வாகம் அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.