நாடு முழுவதும் சர்க்கரை தயாரிக்கும் பணிகள் தொடக்கம்

 நாடு முழுவதுமுள்ள  சர்க்கரை ஆலைகளிலும் கரும்பு பிழிந்து சாறு எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி : நாடு முழுவதும் நடப்பாண்டுக்கான சர்க்கரை தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அனைத்திந்திய சர்க்கரை வணிக சங்கம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் 340 லட்சம் டன்னுக்கும் அதிக கொள்ளளவிலான கரும்பு பிழிந்து சாறு எடுக்கும் திறனுடன்   700க்கும் அதிகமான சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. அங்கு வழக்கமாக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், கரும்பை பிழிந்துச் சாறு எடுத்துச் சர்க்கரை தயாரிக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்குப் பின்,  நாடு முழுவதுமுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் கரும்பு பிழிந்து சாறு எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக என்று அனைத்திந்திய சர்க்கரை வணிக சங்க தலைவர் பிரபூல் விதாலானி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் 2023-24 பருவ காலத்திற்கான கரும்பு விளைச்சல் 434.79 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருட விளைச்சலான 422.25 மில்லியன் டன்களை விட அதிகமாகும் என்று மத்திய வேளான் அமைச்சகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும், அக்.1 நிலவரப்படி, 5.7 மில்லியன் டன்கள் சர்க்கரை இருப்பு உள்ளதாகவும், 2022-23 ஆண்டு காலகட்டத்தில் பல மாநிலங்களில் நிலவிய மோசமான வானிலையால் உள்நாட்டு கரும்பு உற்பத்தி சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சர்க்கரை நுகர்வு, 29 மில்லியன் டன்களாக உள்ளதாகவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com