41 தொழிலாளர்களும் நன்றாகவே இருக்கிறார்கள்: ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் 

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் நன்றவாகவே இருப்பதாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மீனு சிங் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டரில் பயணிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்.
ஹெலிகாப்டரில் பயணிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்.

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் நன்றவாகவே இருப்பதாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மீனு சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 41 தொழிலாளர்கள் அனைவரும் நன்றவாகவே இருக்கிறார்கள். அவர்களை நோயாளிகள் என்றுகூட சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இயல்பாகவே இருக்கிறார்கள். அவர்களின் ரத்தக்கொதிப்பும் ஆக்ஸிஜன் அளவும் நன்றாக இருக்கிறது. சில அடிப்படையான மருத்துவ சோதனைகள் மட்டும் நாங்கள் செய்தோம். இவ்வாறு அவர் கூறினார். 

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் கடந்த 12-ஆம் தேதி சிக்கினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்புப் பணிகள் 17 நாள்கள் கழித்து செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக 41 பேரும் மீட்கப்பட்டனர். 

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனைத்து தொழிலாளர்களையும் விமானப் படையின் சினுக் ரக ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் 41 தொழிலாளர்களுக்கும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com