தெலங்கானாவில் திரிசங்கு பேரவையா?

தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் கே.சந்திரசேகர் ராவின்(கேசிஆர்) பாரதிய ராஷ்டிர சமிதிக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் கே.சந்திரசேகர் ராவின்(கேசிஆர்) பாரதிய ராஷ்டிர சமிதிக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

அதேபோல், மக்களவை தேர்தலில் தென் மாநில மக்களிடையே பாஜகவின் பலத்தை நிரூபிக்க தெலங்கானா தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்காக பல மாதங்களாக தெலங்கானாவை குறிவைத்து பாஜக தலைவர்கள் சூறாவளி பிரசாரமும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தெலங்கானாவில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் கேசிஆர் ஆட்சி அமைப்பார் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 

இருப்பினும், காங்கிரஸுக்கும் தேசிய ராஷ்டிர சமிதிக்கும் இடையே சில தொகுதிகள் மட்டுமே வித்தியாசம் இருக்குமென்றும், பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் பி.ஆர்.எஸ். 58 இடங்களிலும், காங்கிரஸ் 56 இடங்களிலும், பாஜக 10  இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று சிஎன்என் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன் கீ பாத் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவில் பி.ஆர்.எஸ். 40-55, காங்கிரஸ் 48-64, பாஜக 7-13  இடங்களில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com