கமிஷன் தராததால் புது சாலையை சேதப்படுத்திய பாஜக எம்.எல்.ஏ.!

உத்தரப் பிரதேசத்தில் உரிய கமிஷன் தராததால், பொதுப்பணித் துறை போட்ட சாலையை பாஜக எம்.எல்.ஏ. வீர் விக்ரம் சிங் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கமிஷன் தராததால் புது சாலையை சேதப்படுத்திய பாஜக எம்.எல்.ஏ.!


உத்தரப் பிரதேசத்தில் உரிய கமிஷன் தராததால், பொதுப்பணித் துறை போட்ட சாலையை பாஜக எம்.எல்.ஏ. வீர் விக்ரம் சிங் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் ஷாஜஹான்பூர் முதல் பூடாவுன் பகுதி வரை மாநில பொதுப்பணித் துறை சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.

சாலை அமைக்கும் பணியை குத்தகைக்கு எடுத்த நிறுவனம், அந்தத் தொகுதிக்குட்பட்ட பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான வீர் விக்ரம் சிங்கிற்கு 5 சதவிகித கமிஷன் தர வேண்டும் எனக் கூறப்படுகிறது. 

உரிய கமிஷன் தராததால், எம்.எல்.ஏ. விக்ரம் சிங், மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலையை தோண்டி சேதப்படுத்தினார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை சேதப்படுத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக ஒப்பந்ததாரர் புகார் அளித்தார். புகாரின் பேரில் அக்டோபர் 3ஆம் தேதி வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், சாலையை சேதப்படுத்தியவர்களிடம் அதனை சீரமைப்பதற்கான தொகையைப் பெறவும் உத்தரவிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com